சினிமா - இந்த மூன்று எழுத்து பலரது தூக்கங்களை கலைந்துள்ளது.
இந்த உலகத்தை ஆட்டி படைக்கிறது. சினிமா பார்க்காதவர்கள் மிக குறைவு.
எங்கோ நடப்பதை நமக்கு காட்டுகிறது. நமக்குள் நடப்பது போல் ஒரு உணர்வை தூண்டுகிறது. நம்மில் ஒரு பாதிப்பை உண்டாக்கிறது.
இந்த சினிமாவில் நுழைந்து பெரிய நடிகன் , நடிகை, இயக்குனர், நடன இயக்குனர் ஆவதே பலரது லட்சியம். அதை ஊக்குவிப்பது போன்று இன்று பல நிகழ்ச்சிகள் வந்து உள்ளன .
1. ஏர்டெல் சூப்பர் சிங்கர்
2. உங்களில் யார் அடுத்த பிரபு தேவா
3. நாளைய இயக்குனர்
இது போல் அடுத்து வரும் காலங்களில் யார் அடுத்த விஜய், அஜித், சிம்பு , சிம்ரன், ஏ ர் ரஹ்மான் , இளையராஜா ,பி சி ஸ்ரீராம் , வாலி, வைரமுத்து, தோட்டாதரணி, சாபு சிரில், ஜாக்குவார் தங்கம், கனல் கண்ணன் இப்படி போய் கிட்டே இருக்கும்.
ஏன் எப்படி ?
சினிமாவின் மீது காதல் கொண்டவர்கள் இந்த ஊரில் அதிகம்.
சினிமாவை வெறும் ஒரு ஊடகமாக பார்க்கலாம் அதை ஒரு மிக பெரிய பணம் செய்யும் வித்தை என்பதை பலரும் அறிவார்கள்.
ஒரு சினிமா என்பது பல ஆயிரகணக்கான மக்கள் உழைப்பில் , பல கோடி பேர் கண்டுகளிக்க கூடியது. இதில் யார் யார் உழைக்கிரார்கள். அதில் அவர்களது பங்கு என்ன என்பதை பற்றி இங்கு பார்போம். இதில் உழைப்பவர்களுக்கு எல்லாம் தக்க சன்மானம் கிடைக்கிறதா ??
ஒரு திரைப்படம் உருவாக காரணமாக இருப்பவர் இயக்குனர்.
இயக்குனர் - அந்த படத்தின் கதை, திரைக்கதை முடிவு செய்கிறார்.
இவர் தலைமையில் உதவி இயக்குனர்கள் பணி செய்வர்.
ஒளிபதிவாளர் - அந்த படத்தை பதிவு செய்கிறார்.
இவர் தலைமையில் உதவி ஒளிபதிவாளர் பணி செய்வர்.
இசை அமைப்பாளர் - பின்னணி இசை மற்றும் பாடல்கள்.
இவர் கவிஞர்,பாடகர்கள்,இசை கருவி இயக்குபவர்கள் என்று பல பேர் கூட்டணியில் தான் பாடல்கள் உருவாகிறது.
கலை இயங்குனர்
ஒலிப்பதிவாளர்
நடன ஆசிரியர்
சண்டை காட்சி அதற்கு ஒரு அமைப்பாளர்.
நடிகர் ,நடிகை , துணை நடிகர்கள் என்று பல பேர் உழைப்பில் உருவாவது தான் சினிமா.
இதை உருவாக்குவதில் ஒரு தயாரிப்பாளர் தனது பணத்தை முதலீடு செய்கிறார்.
தமிழகத்தில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால் . அது தமிழ் நாட்டில் உள்ள ஆறு கோடி மக்கள் பார்க்கின்றனர்.
எல்லாரும் படம் பார்ப்பது இல்லை. ஆனால் சிலர் ஒரு படத்தை நான்கு, ஐந்து முறை பார்பதினால். சராசரியாக அனைவரும் பார்கிறார்கள் என்று கணக்கிட்டு கொள்ளலாம்.
ஒரு சராசரி படம் ( பெரிய நடிகர் படம் இல்லை )
6 கோடி மக்கள் 10 ரூபாய் செலவு செய்து படம் பார்த்தல் = 60 கோடி ரூபாய்
இது டிக்கெட் வருமானம் மட்டுமே.
இதை தவிர இசை தட்டு விற்பனை, வெளிநாடு விற்பனை, இசை தட்டு வெளியுடு என்று ஒரு விழா நடத்தி அதை ஒரு தனியார் தொலைகாட்சி நிறுவனத்திற்கு விற்பனை, மற்றும் தொலைகாட்சி உரிமம் , பாடல் உருமம் என்று பல வழிகளில் பணம் செய்ய படிக்கிறது.
இதில் ஒவ்வொரு துறை வரியாக பார்போம்.
தொடரும்.
Monday, June 7, 2010
Subscribe to:
Posts (Atom)