Saturday, May 29, 2010

சிங்கம் திரை விமர்சனம்

நீண்ட நாள் கழித்து தமிழில்ஒரு நல்ல படம் வந்து இருக்கிறது.
பார்க்க நல்ல படம். மொத்தத்தில்  ஒரு மசாலா திரைப்படம்

சூர்யாவின் 25 வது படம்.
கில்லி, காக்க காக்க மற்றும் சாமி ஆகிய படங்களின்  சாயல் கொஞ்சம் இருக்கிறது.
ஆனால் படம் கொஞ்சம் வித்தியாசமாக படைத்திருக்கிறார் இயக்குனர் ஹரி.

படத்தில் வரும் சூர்யா நன்றாக நடித்து இருக்கிறார். அனுஷ்கா நன்றாக நடித்து இருக்கிறார். ஆனால் இவர்களுக்கு ஒரு பொருத்தம் இல்லை,.  அனுஷ்கா சூர்யா விட உயரம் அதிகம் என்பது சில இடங்களில் நன்றாக தெரிகிறது.

படத்தில் விவேக் ரொம்ப வெட்டியாக வந்து செல்கிறார். சிரிக்க வைக்கவேண்டும் என்று பகீரத முயற்சி செய்கிறார்.

வில்லனாக பிரகாஷ் ராஜ் எப்பவும் போல் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்.
படத்தின்  2 வது பாதி அசுர வேகத்தில் செல்கிறது.  மக்கள் யோசிக்க நேரம் தர கூடாது என்று இயக்குனர் நினைத்து இருக்கிறார்.

நிறைய காட்சிகள் வேகமாக  (fast forward)  செல்கிறது.
ஒளிபதிவாளர் பிரியன் ஹரியுடன் சாமி மற்றும் வேல் செய்தவர் .
வழக்கமாக  ஒரு நெடிய ( Long Shot ) காட்சி கிரேன் உபயோகித்து எடுப்பார்கள்.
இதில் அது போல் பல காட்சிகள்.திருவான்மியூர் மற்றும் சென்னை சேர்ந்த காட்சிகள் ஏரியல் (aerial view) அதிகம் பயன் படுத்தி இருகின்றனர்.

இசை தேவி ஸ்ரீ பிரசாத் ... பரவாஇல்லை எதோ முயற்சி செய்து இருக்கிறார்.

வழக்கமாக ஹரி படத்தில் வரும் எல்லாமே இங்கும் உண்டு.
வீடு, கிராமம், சொந்த பந்தம், அருவாள் இதில் உண்டு. 

வசனம் மிகவும் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், அதே சமயம் அன்பாக பேசி திருத்துவது போலவும் எழுதி இருக்கிறார்.


படத்தின் சிறப்பு அம்சங்கள்

- திரை கதை ஓட்டம், பட தொகுப்பு.
- இயக்குனர் ஹரி 
- சூர்யா, பிரகாஷ் ராஜ்  நடிப்பு


எதிர்பாத்து ஏமாந்த விஷயங்கள்
- பாடல்கள் ( ஒபெனிங் பாடல் ) எல்லா ஹரி படங்களிலும் நன்றாக இருக்கும்
சோடாபாட்டில் கையிலே - ஆறு ,
திருநெல்வேலி அல்வாடா - சாமி ,
இந்த ஊரில் எப்பவுமே கேட்டதே நடக்காதுடா - வேல்

அந்த வரிசையில் பாடல் இல்லை.

மொத்தத்தில்
ஹரி - சூர்யா கூட்டணியில் மற்றும் ஒரு வெற்றி படம்.

சிங்கம் - தனி காட்டு ராஜா

Wednesday, May 26, 2010

சிங்கம் - முன்னோட்டம்

சிங்கம் படம் பற்றி பார்போம்
இந்த படம் இயக்குனர் ஹரி  - சூரியா - தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணி .
இயக்குனர் ஹரி பற்றி சொல்ல வேண்டும். இவரின் முதல் படம் தமிழ்  ( பிரசாந்த் நடித்த படம் ) . இந்த படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.
பிறகு ஹரி எடுத்த சாமி படம் இவரை உச்சிக்கு கொண்டு சென்றது.
ஹரி இயக்குனர் பாலச்சந்தரிடம் இணை இயக்குனராக கல்கி படத்தில் பணியாற்றினர். பிறகு சரண் உடன் இருந்தார்.
சாமி க்கு பிறகு கோவில் , அருள் , ஆறு, தாமிரபரணி ,வேல், சேவல், சிங்கம்.
இயக்குனர் ஹரியின் சிறப்பு அம்சம்
படம் பெயர் தூய தமிழ்ல இருக்கும்.
குடும்ப பாங்கான படம்.
தென் தமிழகத்தில் நடப்பது போன்ற கதை.
வலுவான அறிமுக பாடல்.
அருவாள் ஒரு முக்கியமான கதாபாத்திரம் – எவரோட எல்லா படத்திலயும். சண்டை இல்லாம எவரால படம் எடுக்க முடியாது.
இதற்கு முன்னால் சூர்யா உடன் இவர் செய்த வேல் நல்லா வரவேற்பை பெற்றது. அதற்கு பிறகு இவர்கள் கூட்டணியில் வரும் படம்.

சன் டிவி இந்த படத்தை வாங்கி விட்டார்கள். :(
இந்த படம் ஓடும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.
இன்று அந்த படம் வெளியீடு. பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

கதைகேளு !! கதைகேளு !!!


கதைகேளு.. கதைகேளு ...
நிஜமான கதைகேளு ....
மைக்கல் மதன காமராஜன் கதைய நல்லா கேளு ...

அந்த மாதிரி இந்த ப்லோக்கை ஆரம்பிச்சி இருக்கேன்.
உங்கள் உற்சாகமும் ஊக்கமும் தேவை.

இந்த ப்லோக்கில் தமிழ்நாடு, தமிழ் சினிமா, அரசியல் எல்லாமே உண்டு.